Thursday, June 24, 2010

மூன்றாமவனின் புலம்பல்


சொல்லுங்கள்
பூர்வீக மண்ணை விட்டும்
பிரிந்து போகிறேன்
சொல்லுங்கள்
இறந்து போகவும் சம்மதம்
சுட்டுக் கொல்லவேண்டுமா
சொல்லுங்கள்
பள்ளி வாசலில் வந்து
வசதியாய் வரிசையில் நிக்கிறேன்
வெட்ட வேண்டுமா
வாளை நீட்டுங்கள்
வந்து வீள்கிறேன்
ஒரு முறை கொன்று
ஆத்திரம் அட்ங்கவில்லையா?
அப்படியானால்
இறைவனை வேண்டி
மீண்டு மீண்டும் என்னை
உயிர்த்துத் தருகிறேன்
மேல மேலக் கொல்லுங்கள்
இசைந்து தருகிறேன்
உங்கள் பங்கர்களின் மண்சாக்காய்
என்னை அடுக்குங்கள்
மொட்டார் குண்டுகளுக்கு
என் மூழை சிதறட்டும்
சீலைத் துண்டாய்
சொர்ந்த்து கிடக்கிறேன்
என்னை எடுத்து
உன்கள் துப்பாக்கிகளைத்
துடைத்துக் கொள்ளுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
என்னைக் கொல்லுங்கள்
அதற்குமுன் சொல்லுங்கள்
நண்பர்களே
நீங்கள் நாடு கேட்கிறீர்கள்
அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள்
ஆனால்...
நான் என்ன கேட்டேன்?
இறக்கவும்... இழக்கவும்...

1 comment:

  1. ஏற்கனவே பத்திரிகையில் வாசித்த நினைவு...!
    பிடித்த கவிதை;
    எழுத்துப்பிழைகள் இல்லாமலிருந்தால் மிகவும் நன்று....

    ReplyDelete